Tag: Switzerland news
சுவிட்சர்லாந்து எல்லை சோதனை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள் சுவிட்சர்லாந்துடனான நில எல்லை கட்டுப்பாடுகளை 2026 டிசம்பர் வரை தொடர முடிவு செய்துள்ளன. இந்த நடவடிக்கை சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் மனிதக் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பது, உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எல்லை சோதனைகள் நடைமுறையில் இருந்தாலும் சுவிட்சர்லாந்து மற்றும் ஷெங்கன் (Schengen) பகுதியின் சுதந்திரமான பயண முறை முழுமையாக நிறுத்தப்படவில்லை. தேவையான இடங்களில் […]
அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம்மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வந்த பதற்றத்தையும் மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) வரும் ஜூன் 19 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் Bürgenstock மலைப்பகுதி விடுதியில் கையெழுத்தாக உள்ளது என்று சுவிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த இடம் அமெரிக்கா ஈரான் மற்றும் நடுவர் நாடுகளான பாகிஸ்தான் கத்தார் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் […]
Switzerland Newsசுவிட்சர்லாந்தில் 2025ஆம் ஆண்டில் பதிவான சிவில் விமானப் போக்குவரத்து விபத்துகள் மற்றும் பாதுகாப்பு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 20% அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கூட்டாட்சி சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் (FOCA) தெரிவித்துள்ளது. குறிப்பாக பொழுதுபோக்கு விமானப் பறப்புகளில் இடம்பெற்ற 4 விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் அதேவேளை வர்த்தக விமான சேவைகளில் உயிரிழப்புகளுடன் கூடிய விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 14,972 விமானப் பாதுகாப்பு சம்பவங்கள் […]
சுவிட்சர்லாந்தில் அதிர்ச்சியூட்டும் கடத்தல் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. 30 வயதுடைய ஒருவர் பிரான்ஸிலிருந்து சுமார் 1,860 கிலோ French Fries ஐ எந்த சுங்க வரியும் செலுத்தாமல் மற்றும் குளிர்சாதன வசதியின்றி சுவிட்சர்லாந்துக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் Solothurn மாகாணத்தின் Flüh பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் (FOCBS) சோதனையின் போது Swiss number plate கொண்ட வானில் இந்த பொருட்களை கண்டுபிடித்தனர். மேலும் அந்த வாகனம் […]
சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை, வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை “10 மில்லியன் மக்கள் வரம்பு” (No 10 million Switzerland) என்ற முக்கிய அரசியல் முன்மொழிவு தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முன்மொழிவு நாட்டின் மக்கள் தொகையை 2050 ஆம் ஆண்டுக்கு முன் 10 மில்லியனை (1 கோடி) மீறாத அளவில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதைக் கோருகிறது. இதை வலதுசாரி Swiss People’s Party (SVP) முன்வைத்துள்ளது. இதன் நோக்கம் அதிகரித்து வரும் […]
சுவிட்சர்லாந்து – சிரியா நாட்டு அகதிகளை திருப்பி அனுப்ப திட்டம். சுவிட்சர்லாந்து அரசு, சிரியாவிலிருந்து வந்த அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடைமுறையை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில் Bashar al-Assad ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவின் நிலைமை தெளிவாக இல்லாத காரணத்தால் அகதி விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது நிலைமைகளை ஆய்வு செய்த பிறகு மே 1 முதல் மீண்டும் ஒவ்வொரு விண்ணப்பமும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்படும் என்று […]
ஐரோப்பிய ஒன்றியம் – EES அமைப்பு 2026 ஏப்ரல் முதல் கட்டாயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நுழைவு/வெளியேறுதல் அமைப்பு (EES) 2026 ஏப்ரல் முதல் வாரத்தில் முழுமையாகக் கட்டாயமாக்கப்படுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் சுவிட்சர்லாந்து அதற்கான இறுதி தயாரிப்புகளை முடித்து வருகிறது. கடந்த அக்டோபரில் தொடங்கிய ஆறு மாத முன்னோட்டக் கட்டம் முடிவுக்கு வந்துள்ளது இனிமேல், சூரிச் மற்றும் ஜெனீவா விமான நிலையங்கள் வழியாக பயணிக்கும் வணிகப் பயணிகள் உட்பட EU/EFTA அல்லாத அனைத்து […]
சுவிட்சர்லாந்தின் பிரபல ஸ்கீ சுற்றுலா நகரமான கிரான்ஸ்-மோண்டானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உள்ளூர் பாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கடுமையாக காயமடைந்தவர்களுக்கும் சுவிஸ் அரசு தலா 50,000 சுவிஸ் பிராங்க் (சுமார் 56,000 அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தீ விபத்தில் மொத்தம் 41 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த உதவி தொகை உடனடி நிதி உதவியாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமை மற்றும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் […]