Everyday Gifting மூலம் 4 சதவீத தள்ளுபடி சலுகையில் வாங்கப்பட்ட டிஜிட்டல் பரிசு அட்டைகளே இதுவரை கிடைத்த புகார்களில் இடம்பெற்றுள்ளன. இந்த அட்டைகள் Everyday Rewards இணையத்தளம் அல்லது செயலி வழியாக வாங்கப்பட்டவை. வேறு மாநிலங்களில் உள்ள Big W கடைகளில் பரிவர்த்தனைகள் நடந்ததாகவும் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
புகார்களை விசாரிக்கும் வூல்வொர்த்ஸ்
பல டிஜிட்டல் பரிசு அட்டைகளைப் பாதித்துள்ள பிரச்சினையை ஒப்புக்கொண்ட Woolworths, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த விவகாரம் முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேனைச் சேர்ந்த டெபோரா கெல்லி, 500 டாலர் மதிப்புள்ள அட்டையை வாங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதன் முழுத் தொகையும் விக்டோரியாவின் டான்காஸ்டரில் உள்ள Big W கடையில் செலவிடப்பட்டதை கண்டறிந்தார். சிட்னியைச் சேர்ந்த மைக்கேல் பென்னட், நவம்பர் 9ஆம் தேதி வாங்கிய 400 டாலர் அட்டையின் தொகை நவம்பர் 12ஆம் தேதி பேஜ்வுட் Big W கடையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார். நவம்பர் 14ஆம் தேதி அதை பயன்படுத்த முயன்றபோது அட்டை காணாமல் போயிருந்தது.
இருவரும் அட்டை விவரங்களைப் பகிரவில்லை என்றும், பரிவர்த்தனைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை தெரிந்தால் Gift Card Support குழுவைத் தொடர்புகொள்ளுமாறு Woolworths அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் அட்டைகள் வழங்குவது உள்ளிட்ட அடுத்த நடவடிக்கைகள் குறித்து வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பணியாற்றுவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
Woolworths digital gift cards எவ்வாறு அணுகப்பட்டன என்பது இன்னும் தெளிவாகவில்லை. பாதுகாப்பு குறைபாடு அல்லது தரவு கசிவு ஏற்பட்டதா என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.































