காவல்துறை பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்,
சர்வதேச ஓட்டுனர் உரிமம் (International Driving Licence) மற்றும் தங்கள் நாடின் ஓட்டுனர் உரிமம் கொண்டுள்ள சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட அனுமதி பெற்றுள்ளனர்.
மேலும், தங்கள் நாடின் ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருக்கும் சுற்றுலாப்பயணிகளும் இலங்கையில் தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.
இவ்வுரிமத்தை கொழும்பிலிருந்து 30 நிமிட தொலைவில் உள்ள வெரஹெராவில் அமைந்துள்ள வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் பெறலாம்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கள் நாட்டின் ஓட்டுனர் உரிமத்தை வழங்கி தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.
இலங்கை அரசு எதிர்காலத்தில் சர்வதேச விமான நிலையங்களில் இந்த தற்காலிக ஓட்டுனர் உரிமம் வழங்கும் வசதியையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
⚠️ எச்சரிக்கை: தேவையான ஓட்டுனர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இலங்கையில் வாகனம் ஓட்டக்கூடாது என சுற்றுலாப்பயணிகளுக்கு அவர் கேட்டுக்கொண்டார்.


























