பாரிஸ் மெட்ரோ நெட்வொர்க் முழுவதும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதில் முக்கியமானதொன்றாக மெட்ரோ லைன் 14-ல் 2025ஆம் ஆண்டு பல்வேறு நாட்களில் மூடல்கள் ஏற்படவுள்ளன.

இவை அனைத்து பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதால், திட்டமிட்ட பயணங்கள் மற்றும் மாற்று வழித்தடங்களை தயார்செய்வது அவசியமாகும்.

முதலில் ஜூலை மாதத்தில் புதன்கிழமைகளில் இரவு 10 மணி முதல் மெட்ரோ லைன் 14 இயங்காது.

மூடப்படும் தேதிகள் பின்வருமாறு

ஜூலை 9, ஜூலை 16 மற்றும் ஜூலை 23, 2025. இந்நாட்களில், இரவு 10 மணி ஆகியவுடன் மெட்ரோ நெட்வொர்க் பராமரிப்பு பணிகளுக்காக லைன் 14 முழுமையாக மூடப்படும்.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முக்கியமான பணிக்காக 5 நாட்கள் மெட்ரோ லைன் 14 முற்றிலும் மூடப்படும். இந்த மூடல் ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 8, 2025 வரையிலான நாட்களை உள்ளடக்கியது. இந்த நேரத்தில், மெட்ரோ ரயில்களின் இயக்க கட்டுப்பாட்டுக்கான அமைப்பு (train control system) அதன் இறுதி மற்றும் மேம்பட்ட பதிப்புக்கு மாற்றப்படவுள்ளது. இது மெட்ரோ சேவையின் நீண்டகால மேம்பாட்டிற்கும், பயணிகள் பாதுகாப்பிற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பயணிகள் இந்த தேதிகளில் மெட்ரோ லைன் 14 பயன்படுத்த முடியாததால், மாற்று போக்குவரத்து வழிகள் மற்றும் பொது வாகனங்களின் சேவைகள் குறித்து மீண்டும் பாரிஸ் போக்குவரத்து மையம் அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading