இந்த தொடர்பான சீருடை பரிமாற்ற நிகழ்வு நேற்று (11) பத்தரமுல்ல கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் சீன தூதுவர் கிவ் செங்ஹொங் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் செங்ஹொங் இணக்கச் சான்றிதழ்களை பரிமாறிக் கொண்டனர்.
2025ஆம் ஆண்டிற்காக சீனாவால் 11.82 மில்லியன் மீட்டர் துணி இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதை பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீருடைகள் கிடைத்ததோடு, ரூ.5.17 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட பங்களிப்பு, மாணவர்கள் அனைவரும் சமத்துவத்துடன் கல்வி கற்க உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 2026ஆம் ஆண்டுக்கான சீருடைகளையும் சீன அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் முக்கியமான அடையாளம் எனவும் அவர் கூறினார். இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சீன தூதரக அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.






























