ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 22 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் பணிகள் முழுமை பெறவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அனைத்து வீடுகளும் பாதியில் நிற்பதாகவும், மூன்று வீடுகளுக்கு குழி தோண்டப்பட்ட நிலையில் அடுத்தகட்ட பணி தொடங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையிலும் இருளிலும் தவிக்கும் குடும்பங்கள்
ஏற்கனவே உள்ள குடிசைகள் மழையில் ஒழுகுகின்றன. கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கும் கூரை அமைக்கப்படாததால், மக்கள் தகரச் சீட்டுகள் மற்றும் தார்ப்பாய்களை பயன்படுத்தி வருகின்றனர். மழை நேரத்தில் தங்குவதற்கே சிரமமாக இருப்பதாக குமார் தெரிவித்துள்ளார்.
Koomatti tribal village-ல் வீடுகளுக்கு மின்சார இணைப்பு இல்லை. தெருக்களில் மட்டும் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் அவை சார்ஜ் ஆகாததால், வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர். வெயில் இருந்தாலும், சோலார் தெருவிளக்குகள் இரவு 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே எரிவதாக கூறப்படுகிறது.
புதிய வீடுகளை விரைவாகவும் தரமாகவும் கட்டி முடிக்க வேண்டும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் புதைவட மின் கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம் வலியுறுத்தினார். மேலும், வாக்காளர் பதிவில் உள்ள பிரச்சினையைத் தீர்க்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






























