இந்த 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் சேவையில் பல வருடங்கள் அனுபவம் நிறைந்த ஊழியர்களும் ஓய்வு பெற்ற ஊழியர்களும் இணைக்கப்பட்டு இந்த சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு இருக்க எதிர்வரும் 2 ஜூன் 2025 இல் இருந்து 24 மணி நேரம் கடவுச்சீட்டு வழங்கும் சேவையானது இடம்பெறாது எனவும் சாதாரணமான முறையில் கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின்படி இனி வரும் காலங்களில் அதாவது 2 ஜூன் 2025 க்கு பின்னரான காலப் பகுதியில் தலைமைக் காரியாலயம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் வளமை போல் காலை 7 தொடக்கம் மாலை 2 மணி வரை சகல நடவடிக்கைகளும் இடம்பெறும்.
தொடர்ந்து ஒரு நாள் சேவை பெறுபவர்கள் அல்லது அவசர தேவை கருதி கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவார்கள் முண்ணைய காலப்பகுதி போன்று முன்பதிவு செய்திருக்க வேண்டும்
அத்தோடு முன்பதிவு ஒதுக்கப்படும் திகதிகளில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்குரிய சேவைகள் வழங்கப்படும்.
மற்றவர்கள் வளமை போன்று தலைமை அலுவலகத்தில் அல்லது பிராந்திய அலுவலகத்தில் உத்தியோகபூர்வ நாட்களில் காலை 7 மணி தொடக்கம் மாலை 2 மணி வரை தங்களுடைய கடவுச்சீட்டு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
என இவ் அலுவல்களுக்கு பொறுப்பான சமிந்த பத்திராஜ உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.


























