இதையடுத்து அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டிருந்த நான்கு அரச ஊழியர்களை தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர்களில் மூவர் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றியதாகவும் மற்றொருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசுப் பணிகளுடன் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் அந்த ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதால் அரசுக்கு 2,768,836.14 ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையான அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




























