Tag: Corruption Investigation
முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மேற்கொண்ட விசாரணையின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (05) முன்னிலைப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டிருந்த நான்கு அரச ஊழியர்களை தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் […]
இலஞ்ச வழக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஷாங்க்ரிலா ஹோட்டல் நில ஒப்பந்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சுமார் 100 கோடி ரூபாய் இலஞ்ச குற்றச்சாட்டு குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார். நேற்று (27) ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில் ஆஜரான அவர் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்திருந்த இராணுவத் தலைமையக காணி ஷாங்க்ரிலா ஹோட்டல் திட்டத்திற்காக விற்பனை செய்யப்பட்டபோது சுமார் […]
குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேகநபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது என்றும் அனைத்து விசாரணைகளும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக சுயாதீனமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். விசாரணைகளின் உள்தகவல்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு வெளியிடப்படாவிட்டாலும் […]
நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போலி கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சமீப காலங்களில் பெரும் கவனம் பெற்றுள்ள போலி ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு தப்பிச் செல்லல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. பொலிஸ் தகவல்களின்படி 41 வயதுடைய இந்த அதிகாரி ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை விவகாரப் பிரிவில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய ஒருவரை […]
தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வாவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது. 2019ஆம் ஆண்டு தென் மாகாண சபையின் 16.5 மில்லியன் ரூபா மாகாண சபை உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தென் மாகாணத்தில் செயல்பட்ட பொதுத் தன்னார்வ அமைப்புகளுக்கு நாற்காலிகள் வழங்கும் திட்டத்தில் முறையான அரசாங்க கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு சாதகமாகச் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் […]