தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வாவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது. 2019ஆம் ஆண்டு தென் மாகாண சபையின் 16.5 மில்லியன் ரூபா மாகாண சபை உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தென் மாகாணத்தில் செயல்பட்ட பொதுத் தன்னார்வ அமைப்புகளுக்கு நாற்காலிகள் வழங்கும் திட்டத்தில் முறையான அரசாங்க கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு சாதகமாகச் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 16,361 நாற்காலிகள் தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீட்டு அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாகவும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஷான் விஜயலால் டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.













Leave a Reply