முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
விசாரணைகளின் உள்தகவல்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு வெளியிடப்படாவிட்டாலும் அவற்றின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு முறையாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அதன் மூலம் உண்மை நிலை வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொலிஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தங்களது கடமைகளை சுயாதீனமாக மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகநபர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிகாரிகளை மாற்றவோ நியமிக்கவோ முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் விசேட மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



























