நேற்று (27) ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில் ஆஜரான அவர் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்திருந்த இராணுவத் தலைமையக காணி ஷாங்க்ரிலா ஹோட்டல் திட்டத்திற்காக விற்பனை செய்யப்பட்டபோது சுமார் 100 கோடி ரூபாய் இலஞ்சம் பெறப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பு தாக்கல் செய்துள்ளது. மேலும் குறித்த பணத்தின் ஒரு பகுதி தங்கல்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், CSN ஊடக வலையமைப்பிற்கும் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் சஜின் வாஸ் குணவர்தன தனது வாக்குமூலத்தில் வழங்கிய தகவல்கள் குறித்து ஆணைக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.































