40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்பு
ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்ய, ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார். சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணைத் தூதரான டாக்கா ஹாசி, தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து இசையை வெளியிட்டனர். தயாரிப்பாளர் கண்ணன் ரவி அதைப் பெற்றுக்கொண்டார்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி தலைவர் மற்றும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி உள்ளிட்ட சுமார் 200 பேர் புதுமுகங்களாக அறிமுகமாகியுள்ளதாக நெப்போலியன் தெரிவித்தார். இவர்களில் பலர் மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நேரத்தைப் பயன்படுத்தி படம் 75 நாட்களில் உருவாக்கப்பட்டது.
மேலும், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படத்தில் நடித்துள்ளதாகவும், இது வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் நெப்போலியன் கூறினார். American Aavi film உருவான விதம் குறித்து இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் தனது அனுபவத்தையும் விழாவில் பகிர்ந்துகொண்டார்.






























