இந்த நேரப் பதிவு மூலம் கடந்த 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஹரிஜன் ரத்நாயக்க பதிவு செய்திருந்த 49.44 விநாடிகள் என்ற தேசிய சாதனையை அவர் முறியடித்தார்.மூத்த பயிற்சியாளர் அனுர பண்டாரவின் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்று வரும் அகலங்க பழைய சாதனையை 0.41 விநாடிகள் முன்னேறி புதிய சாதனையை உருவாக்கியுள்ளார்.இந்த வெற்றியின் மூலம் இலங்கையின் இளைஞர் கனிஷ்ட மற்றும் மூத்த பிரிவுகளுக்கான தேசிய சாதனைகளை ஒரே நேரத்தில் தன்வசப்படுத்தியுள்ள அவர் நாட்டின் தடகள வரலாற்றில் அரிய சாதனையை படைத்துள்ளார்.Sri Lanka News
மேலும் ஆசிய U23 தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கம் என்ற பெருமையையும் அகலங்க பெற்றுள்ளார். இது இலங்கை தடகளத்துறைக்கு மிகப்பெரும் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.இதற்கு முன்னரும் அகலங்க தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அனைத்துத் தீவு பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் 49.90 விநாடிகளில் 400 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தை நிறைவு செய்து 50 விநாடிகளுக்கு குறைவான நேரத்தை பதிவு செய்த முதல் இலங்கை கனிஷ்ட வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.இளம் வயதிலேயே தேசிய சாதனைகளை முறியடித்து வரும் ஆயோமல் அகலங்க எதிர்காலத்தில் இலங்கை தடகளத்தின் முக்கிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




























