புதன்கிழமை மாலை, பழைய நகர மையத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வர்ராக் (Warraq) வட்டாரத்தில், பரபரப்பான வளையச்சாலையில் இந்த விபத்து நடந்தது. எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து தீப்பற்றியதில் அருகிலிருந்த பல வாகனங்களும் தீக்கிரையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணை தொடக்கம்
காயமடைந்தவர்கள் தீக்காயங்கள் மற்றும் புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். சம்பவ இடத்துக்கு 39 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், விசாரணை தொடர்பான ஆரம்பத் தகவல்களின்படி, டேங்கர் சென்றபோது உயர் மின்னழுத்த மின்கம்பி ஒன்று அதன் முன்னால் விழுந்ததாகவும், இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் டேங்கர் சாலை நடுப்பகுதியைக் கடந்து கவிழ்ந்து தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் விசாரணையைத் தொடங்கியுள்ளார். உயிரிழந்தவர்களை அடையாளம் காண உடல்களிலிருந்து டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். Cairo fuel tanker fire சம்பவத்துக்குப் பிறகு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்து, சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
































