காவல் துறைப் பேச்சாளர் உதவி காவல்துறைஅதிகாரி (ASP) வூட்லர் தெரிவித்ததாவது, பொதுச் சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகப் பெருமளவு புகார்கள் கிடைத்துள்ளன.
அவர் மேலும் கூறுகையில், நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மட்டும் 10 மோட்டார் சைக்கிள்களும் 3 மூன்று சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இந்த திருட்டுச் சம்பவங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.





























