கொழும்பு துறைமுகம் மற்றும் காலி முகத்திடலுக்கான இணைப்பு
புதிய மேம்பாலச் சாலை 5.2 கிலோமீட்டர் நீளமானது. இதன் வழியாக இந்தத் தூரத்தை வாகனங்கள் சுமார் 5 முதல் 6 நிமிடங்களில் கடக்க முடியும் என்று திட்டப் பணிப்பாளர் சுபுன் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
தற்போது, அதிக நெரிசல் நேரங்களில் பேஸ்லைன் வீதி வழியாக கொழும்புக்குள் செல்ல வாகன ஓட்டிகளுக்கு 40 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஆகிறது. Colombo Port Access Elevated Highway திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தை நேரடியாக அணுகும் வசதி ஏற்படுத்தப்படும்.
துறைமுகம் வரை செல்லும் மேம்பாலச் சாலைப் பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தையும் காலி முகத்திடலையும் இணைக்கும் அடுத்த பகுதியின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுத் திட்டமும் நிறைவடைந்ததும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் கொழும்பின் மையப்பகுதிக்கு நேரடியாகச் செல்ல முடியும்.































