September 9, 2026
Breaking News
USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்
முகப்பு News செய்தி
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: 2 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ.25,000 – அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்; ஜனாதிபதி
News

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு ஜனாதிபதி

📅 வெளியீடு: 06 Dec 2025 07:15 🔄 புதுப்பிப்பு: 06 Dec 2025 07:15 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார்.

அதன்படி, சொத்து வரி 2026 ஆம் ஆண்டில் விதிக்கப்படமாட்டாது என்றும், அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கை அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பின்வரும் அறிவிப்புகளை ஜனாதிபதி வெளியிட்டார்:

அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஏற்கனவே 10,500 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிவாரணப் பணிகளுக்காக 50 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், சீரற்ற வானிலையினால் மொத்தமாக 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5,165 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றும் 55,747 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு அத்தியாவசிய உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 3 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேவைப்பட்டால் இது 6 மாதம் வரை நீடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நெல், சோளம் மற்றும் தானிய பயிர்செய்கைக்கு ஹெக்டேருக்கு 150,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், வௌ்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த காய்கறி செய்கையாளர்களுக்கு ஹெக்டேருக்கு 200,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல், சீரற்ற வானிலையால் முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள 50 இலட்சம் ரூபாயும், காணிகள் அற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் காணி ஒன்றும் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அவ்வாறு அரச காணிகள் இல்லாவிட்டால் காணி ஒன்றை கொள்வனவு செய்ய 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் இழந்த உயிர்களை மீண்டும் கொடுக்க முடியாது என்றாலும், ஒரு அரசாங்கமாக உயிருடன் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான பண்புகளைக் கொண்ட ஒரு நாட்டை உரிமையாக்கிக் கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார்.

அரசாங்கம் அதற்காக அதிகபட்சம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனர்த்தம் காரணமாக இதுவரையில் தமது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களை இழந்து வேதனையில் இருப்பவர்களுக்கு ஒரு நாடாக தமது அனுதாபத்தை தெரிவிப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

“எந்தவொரு அனர்த்தத்திலும் மனித உயிர்களை பறிக்க முடியும். ஆனால் எமக்கு ஒன்று தெளிவாகப் புலப்பட்டுள்ளது. இலங்கையர்களிடம் உள்ள மனிதநேயத்தை எந்தவொரு அனர்த்தத்திலும் பறிக்க முடியாது என்ற பலமான பண்பு இந்த அனர்த்தத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணத்திலும் மாத்தறை மக்கள் பதுளைக்குச் சென்றுள்ளனர். காலியில் உள்ளவர்கள் கண்டிக்குச் சென்றுள்ளனர். களுத்துறையில் உள்ளவர்கள் நுவரெலியாவுக்குச் சென்றுள்ளனர். அம்பாந்தோட்டையில் உள்ளவர்கள் புத்தளத்திற்குச் சென்றுள்ளனர். தாம் ஒருபோதும் நடந்திராத வீதிகளை அவர்கள் துப்புரவு செய்து கொண்டிருக்கிறார்கள். தமது உறவினரோ நண்பரோ அல்லாத பிரஜை ஒருவரின் வீட்டை சுத்தம் செய்கிறார்கள். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களுடன் தோளோடு தோள் நின்று துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதுதான் நம் நாட்டில் எந்த அனர்த்தத்தின் போதும் பறிக்க முடியாத மனிதநேயம் என்பதை இந்த அனர்த்தத்தில் எமக்கு நிரூபித்து வருகின்றனர்.”

அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்தத் தருணத்திலும் தாய்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் இரவு பகல் பாராது உழைத்து வருவதாக வலியுறுத்திய ஜனாதிபதி, அவர்கள் பெரும் அதிர்ச்சியுடன் இதற்காகத் தலையிடுவது குறித்து நன்றி தெரிவித்தார்.

இரத்த வங்கிக்கு 20,000 அலகுகள் நன்கொடையையும் எமது நாட்டு மக்கள் வழங்கியுள்ளதாகவும், அது எந்தவொரு அனர்த்தத்திலும் அழிக்க முடியாத மனிதநேயம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வளர்ச்சியடைந்த பல நாடுகளின் பிரதான காரணி மக்களின் தைரியமான தலையீடே என்று கூறிய ஜனாதிபதி, சில அரசியல்வாதிகள் அதையும் கேலிக்குரிய நிலைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்தார்.

“இந்த அனர்த்தம் ஏற்பட்ட போது எமது மக்களை மீட்பதற்கு முப்படைகளும் பொலிஸாரும் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். கலா ஓயாவில் பஸ் வண்டியில் இருந்த 70 இற்கும் அதிகமானோர் எந்த நேரத்தில் தமது உயிர் போகுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மணித்தியாலத்திற்கு ஒரு முறை பேஸ்புக் பதிவுகளை இட்டனர். அந்த நேரத்திலும் எமது கடற்படையினர் அவர்களை மீட்பதற்கான வீரமிக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கடினமான சோர்வான நிலைமையின் கீழ் ஒரு கடற்படை குழுவினர் இந்த வெள்ளப்பெருக்கை தோற்கடிக்க தலையிட்டிருந்தனர். அதன் பெறுபேறாக அந்த மக்களை கூரை ஒன்றின் மேல் ஏற்றினர். சிறிது நேரத்தில் பஸ் அடித்துச் செல்லப்பட்டது. படகு பழுதடைந்தது. அந்த அதிகாரிகளுக்கும் தமது உயிரைப் பாதுகாக்க கூரையின் மீது இருக்க நேரிட்டது. 18 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் 70 இற்கும் அதிகமானோர் கடும் வெள்ளப்பெருக்கிற்கு மத்தியில் அந்த கூரையின் மீது உயிர்வாழ தைரியம் கொடுத்தது அந்த மூன்று கடற்படை அதிகாரிகளே. அதிகாலை 3.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து நொச்சியாகமவிற்கு வரும்போது கடற்படை அதிகாரிகள், அப்போதும் சிலர் இப்போது 17 மணித்தியாலம் என்று பேஸ்புக் பதிவுகளை இடுகின்றனர். கடினமான முயற்சி. அந்த கிராமத்து இளைஞர்கள் இருவர் வேறு பாதையொன்றைக் காட்டியதால் 70 பேரையும் பாதுகாப்பாக மீட்க கிடைத்தது. அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ஒருவர் உயிரிழந்தார்.”

மாவிலாறு அணை உடையும் சந்தர்ப்பத்தில் கூட இராணுவம், பொலிஸ் மற்றும் மக்கள் முன்னின்று ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்த அனர்த்த நிலைமைக்குள் உயிரைத் தியாகம் செய்து முப்படையினர் உள்ளிட்ட அரச சேவையினர் பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

“கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அந்த அனர்த்தம் இடம்பெற்ற நேரத்திலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்த கனவான்கள் அழகாக ஆடை அணிந்து, வாசனை திரவியம் பூசிக் கொண்டு சென்று அரசாங்க அதிபரிடம் கேள்வி கேட்கிறார்கள், இது எங்கே இருக்கிறது என்று. அதனால் அரச ஊழியர்கள் இந்த அனர்த்தத்தின் போது ஆற்றிய பணி குறித்து நாம் மிகவும் நன்றி கூற வேண்டும்.”

சுகாதாரத் துறையினர் மக்களின் உயிரைக் காக்க பாரிய பணியொன்றை முன்னெடுத்ததாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இவ்வாறான அனர்த்த நிலைமையை முகங்கொடுக்க முடியாத காரணத்தினால் எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கைக்கு அமைய பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

“சாதாரண சட்டம் எமக்கு இவ்வாறான அனர்த்தத்திற்கு முகங்கொடுப்பதற்கு இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் போதுமானதல்ல. சாதாரண சட்டத்திற்கு அப்பாற்பட்ட வலுவான சட்டமொன்று எமக்குத் தேவை இவ்வாறான சந்தர்ப்பத்தில். எவ்விதத்திலும் அரசியலமைப்பையோ சட்டத்தையோ மீறவில்லை. இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க மிகவும் பொருத்தமான சட்டம் எது என்று நாங்கள் பார்த்தோம். மிகவும் பொருத்தமான சட்டம் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவு கிடைத்தது. அது பற்றி மிகவும் நன்றி. ஆயினும் இந்த பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை எவ்விதத்திலும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்குப் பயன்படுத்த மாட்டோம். என்னையோ அல்லது எமது அமைச்சர்களையோ விமர்சிப்பதை நாங்கள் பொருட்படுத்துவது கூட இல்லை. அவதூறுகள் அவசியமில்லை. ஆனால் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களைப் பயமுறுத்த, மக்களைத் திசைதிருப்ப அல்லது இந்த அமைதியான நிலையை குழப்புவதற்காக அனர்த்தத்திற்கு உள்ளான சமூகத்திற்குள் ஏதேனும் முரண்பாடான குழப்பத்தை உருவாக்க யாராவது முயற்சித்தால் அது நாங்கள் இந்த அனர்த்தத்திலிருந்து மீள்வதற்குச் செய்யும் திட்டத்திற்குத் தடையாகும். அதற்காக மாத்திரமே நாங்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவோம். அப்படியல்லாமல் மக்கள் எழுதும், பேசும் கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொள்வதில்லை.”

பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு மக்களைத் திசைதிருப்புபவர்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகக் கூறிய ஜனாதிபதி, தனக்குத் தேவையானது மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான தலையீட்டின் ஊடாக இந்த அனர்த்தத்திலிருந்து மீள்வதே என்றும் கூறினார்.

நல்லெண்ணத்துடன் இந்த அனர்த்தத்தின் போது தீர்மானங்களை எடுத்த ஒவ்வொரு அதிகாரியையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் முதற்தடவையாக பிரதேச செயலாளர் ஒருவருக்கு 500 இலட்சம் வரை செலவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான அனர்த்தத்தின் போது பாரம்பரிய சட்ட வரையறைக்குள் சிக்கியிருக்கக் கூடாது என்று கூறிய ஜனாதிபதி, தற்போது விரைவாக வீடுகளுக்குச் செல்லக்கூடிய மக்களுக்கு அந்த இடங்களுக்குச் செல்வதற்கு இடமளிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இதுவரையில் அனர்த்தம் காரணமாக 5,165 வீடுகள் அழிவடைந்துள்ளதுடன், 57,312 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, 17 இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்த அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

இது பொருளாதாரத்திற்கு தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

“எமது நாட்டின் பொருளாதாரம் சிறந்த இடத்தில் இல்லை. எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளியிலிருந்து வரும் சிறிய அதிர்ச்சியைக்கூட தாங்கிக் கொள்ள முடியாது. நாம் இந்தப் பொருளாதாரத்தை மிகவும் அவதானமாக முகாமைத்துவம் செய்து கொண்டு முன்னெடுத்துச் செல்லும் பயணம் இது. ஆனால் சிலர் வெறி பிடித்த மனதுடன், எமது பொருளாதாரம் குறித்து கொடூரமான மனநிலையுடன் வாழ்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பாக பேசும் மரீன் தொந்தலியேர்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி
09 Sep 2026
பிரான்ஸின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
09 Sep 2026
பிரான்சில் அதிக ஓய்வூதியதாரர்களுக்கான பட்ஜெட் மாற்றம்
பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம்
09 Sep 2026
பாரிஸ் கான்கோர்ட் சதுக்கத்தில் போப் லியோன் XIV திருப்பலிக்கான ஏற்பாடுகள்
பிரான்சில் லியோன் XIV: பாரிஸ் திருப்பலிக்கு தினமும் 8,000 பேர் பதிவு
09 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புட்ச் இசை நிகழ்ச்சி
அமியான் நகரில் பார்பரா புட்ச் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து
09 Sep 2026
பிரான்சில் உயர்ந்த எரிபொருள் விலையுடன் காணப்படும் பெட்ரோல் நிலையம்
எரிபொருள் விலை உயர்வு: பிரான்ஸ் அரசு புதிய பொதுவான உதவியை நிராகரிப்பு
09 Sep 2026
ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் போப் லியோ XIV பங்கேற்கும் இளைஞர் விழா
ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு
09 Sep 2026
Forbach செயின்ட் ரெமி தேவாலயத்தின் வெளிப்புறம்
பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியுடன் நுழைந்தவர் கைது
09 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்
வெனிஸ் திரைப்பட விழாவில் கேசி மற்றும் பென் அஃப்லெக்
பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல்
09 Sep 2026
பெட்டிஸ் செவில்லா வீரர்கள் லில் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் வெற்றியை கொண்டாடும் காட்சி
எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா
09 Sep 2026
Elizabeth Holmes documentary production and film festival coverage
எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்
09 Sep 2026
வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படம் குறித்து பேசும் ஆஷ்லி செயின்ட் கிளேர்
எலான் மஸ்க் குறித்து பேச 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை நிராகரித்த முன்னாள் காதலி
09 Sep 2026
சீன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா
சூர்யா–ஜீத்து மாதவன் படத்துக்கு ‘சீன்’ எனத் தலைப்பு அறிவிப்பு
09 Sep 2026
நடிகை திவ்யா ஸ்பந்தனா திருமணம் குறித்து பேட்டியில் கருத்து தெரிவிக்கும் காட்சி
திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை”
09 Sep 2026
Artificial திரைப்படத்தில் சாம் ஆல்ட்மேனாக நடிக்கும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்
சாம் ஆல்ட்மேன் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்: ‘Artificial’ படத்தின் முதல் டிரெய்லர் வெளியீடு
09 Sep 2026
Julia Roberts returning to Broadway in Small Mouth Sounds
ஜூலியா ராபர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிராட்வே மேடைக்குத் திரும்புகிறார்
09 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading