டிசம்பர் 14 மாலை 5.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அண்மை நிலவர அறிக்கையின் படி, 3,85,093 குடும்பங்களைச் சேர்ந்த 13,44,898 பேர் நாடு முழுவதும் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புகள் அதிகமாக பதிவான மாவட்டமாக கண்டி மாவட்டம் காணப்படுவதுடன், அங்கு 237 பேர் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து
- நுவரெலியா – 89 பேர்
- பதுளை – 88 பேர்
- குருநாகல் – 61 பேர்
- புத்தளம் – 36 பேர்
என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அனர்த்தங்களால் 6,163 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 1,12,171 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
முற்றாக சேதமடைந்த வீடுகள் அதிகமாக கண்டி மாவட்டத்தில் 2,012 பதிவாகியுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 632 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. நுவரெலியா, குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பெருமளவு வீட்டு சேதங்கள் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க நாடு முழுவதும் 766 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 22,638 குடும்பங்களைச் சேர்ந்த 70,359 பேர் இம்முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முகாம்களில் அதிகமான இடம்பெயர்ந்தோர்
- நுவரெலியா – 19,750 பேர்
- பதுளை – 19,409 பேர்
- கண்டி – 17,437 பேர்
என பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
தேடுதல், மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் சேத மதிப்பீடுகள் மாவட்ட நிர்வாகங்கள், முப்படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சில பகுதிகளில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவுவதால் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் கேட்டுக்கொண்டுள்ளது.






























