2025 அக்டோபரில் கட்டப்படியான முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட Entry/Exit System (EES) 2026 ஏப்ரல் முதல் அனைத்து Schengen வெளிப்புற எல்லைகளிலும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்த முறைமை கையால் பாஸ்போர்ட்டில் முத்திரையிடும் முறையை மாற்றி முகஅடையாளம் கைரேகை மற்றும் பயண விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்கிறது.
ஐரோப்பிய ஆணையத்தின் தகவலின்படி நுழைவு மறுக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் பயணத்தின் நோக்கத்தை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்காதது Schengen பகுதியில் அனுமதிக்கப்பட்ட 90/180 நாள் விதியை மீறி முன்பு தங்கியிருந்தது காலாவதியான அல்லது போலியான பயண ஆவணங்களை பயன்படுத்தியது போன்ற காரணங்களால் தடுக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்ட சிலரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
EES முறைமை மூலம் இதுவரை கோடிக்கணக்கான எல்லைக் கடப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முறைமை எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு விசா விதிமீறல்கள் மற்றும் அடையாள மோசடிகளை எளிதில் கண்டறிய உதவுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கிறது.
இதேவேளை, சில விமான நிலையங்கள் மற்றும் எல்லைச் சாவடிகளில் நீண்ட வரிசைகள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்து துறை கவலை தெரிவித்திருந்தாலும் அவை பெரும்பாலும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பு சிக்கல்களால் ஏற்பட்டவை என்றும், EES முறைமையை நிறுத்தும் திட்டம் தற்போது இல்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.




























