குறிப்பாக முஸ்தபா ஜிகோ அடித்த இரண்டாவது கோல் VAR பரிசீலனைக்குப் பிறகு இரத்து செய்யப்பட்டதையும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் எகிப்து கோரிய இரண்டு பெனால்டி வாய்ப்புகள் மீளாய்வு செய்யப்படாததையும் எகிப்து தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய அணியின் உரிமைகளையும் அனைத்து அணிகளுக்கும் சமமான மற்றும் நியாயமான போட்டி சூழலையும் பாதுகாப்பதே தங்களது நோக்கம் என எகிப்திய கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
போட்டிக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் இந்தப் போட்டியின் இறுதி முடிவு FIFA வலியுறுத்தும் “நியாயமான விளையாட்டு” கொள்கைக்கு முரணானது என கூறியதுடன் வீரர் முஸ்தபா ஜிகோவும் நடுவரின் தீர்ப்புகள் எகிப்தின் கடின உழைப்பை வீணடித்ததாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில் எகிப்தின் முறைப்பாட்டை FIFA பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேவேளை அர்ஜென்டினாவின் அடுத்த போட்டிக்கான அதிகாரிகள் நியமனம் குறித்த தகவல்களும் சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.






























