France financial news
பிரான்சில் சேதமடைந்த கிழிந்த கறைபட்ட அல்லது பகுதியளவில் எரிந்த யூரோ பணத்தாள்கள் (Euro Banknotes) இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. அவற்றை புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவோ அல்லது வங்கி கணக்கில் பணமாகத் திரும்பப் பெறவோ முடியும் என்று பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ சேவை தளம் தெரிவித்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், மாற்றிக் கொள்ள அல்லது திரும்பப் பெற தொகை வரம்பு எதுவும் இல்லை. ஆய்வின் பின்னர் அசல் நோட்டின் 50% க்கும் அதிகமான பகுதி மீதமிருந்தால் அது செல்லுபடியாகும் நோட்டாகக் கருதப்பட்டு மாற்றம் அல்லது பணம் திருப்பி வழங்கப்படும்.
நோட்டுகள் சிறிய அளவில் சேதமடைந்திருந்தால் வங்கியின் பணம் வைப்பு மற்றும் பணம் எடுக்கும் வசதி கொண்ட ATM இயந்திரங்களில் வைப்பு செய்து உடனடியாக கணக்கில் வரவு பெறலாம். ஆனால் மிகவும் சேதமடைந்திருந்தால் நேரடியாக Banque de France அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்புவது அனுமதிக்கப்படவில்லை. 2026 மார்ச் 21 முதல் La Poste மூலம் இந்த சேவை வழங்கப்படுவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. France financial news
பணம் மாற்றம் அல்லது திருப்பி பெற விண்ணப்பிப்பவர்கள் செல்லுபடியாகும் அடையாள அட்டை வங்கி கணக்கு விவரங்கள் (RIB/IBAN) மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் பணத்தின் மூலத்தை நிரூபிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். மேலும் தகவல்களுக்கு Banque de France உதவி எண்ணான 3414-ஐ தொடர்புகொள்ளலாம்.





Leave a Reply