புதிய IRL மதிப்பு 148.37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 1.15% உயர்வாகும். முதல் காலாண்டில் (Q1 2026) இந்த உயர்வு 0.78% ஆக இருந்தது.
ஆனால், இந்த உயர்வு தானாகவே அமலாகாது. வாடகை ஒப்பந்தத்தில் வருடாந்திர வாடகை திருத்தம் செய்யும் பிரிவு இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி அல்லது அதன் ஆண்டு நிறைவு நாளிலேயே இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
இந்த IRL குறியீடு கடந்த 12 மாதங்களில் புகையிலை தவிர்ந்த நுகர்வோர் விலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸ் தேசிய புள்ளிவிவர நிறுவனம் (INSEE) மூலம் கணக்கிடப்படுகிறது.



























