சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்சில் வீட்டுக் கடன் (Mortgage) பெறுவதற்கான தற்போதைய விதிகளை தளர்த்தும் புதிய சட்ட முன்மொழிவு தேசிய சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விதிப்படி கடன் தவணை காப்பீடு மற்றும் பிற கடன் செலவுகள் சேர்த்து மாதாந்திர வருமானத்தின் 35% ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது.

இருப்பினும் புதிய முன்மொழிவின் படி விண்ணப்பதாரரின் மொத்த நிதிநிலை (Overall financial situation) மற்றும் அனைத்து கட்டாயச் செலவுகளுக்குப் பிறகும் அவரிடம் போதுமான வாழ்க்கைச் செலவுத் தொகை (reste à vivre) இருப்பது உறுதி செய்யப்பட்டால் 35% வரம்பை மீறியும் வங்கிகள் வீட்டுக் கடன் வழங்க அனுமதிக்கப்படலாம்.

இந்த மாற்றம் குறிப்பாக அதிக வருமானம் பெறுபவர்கள் ஓய்வூதியம் குறைவாக இருந்தாலும் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகமாக உள்ள ஓய்வுபெற்றவர்கள் வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துகள் கொண்டவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் போன்றோருக்கு பயனளிக்கக்கூடும்.

தற்போது கூட வங்கிகளுக்கு சுமார் 20% கடன் கோப்புகளில் விதிவிலக்கு அளிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் விண்ணப்பதாரரின் வருமான விகிதத்தை மட்டுமல்லாமல் அவர்களின் முழுமையான நிதி நிலையை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பிரான்சில் வீட்டுக் கடன் இன்னும் ஒரு சட்ட முன்மொழிவு மட்டுமே. இது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்த பின்னரே புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். அதுவரை தற்போதைய 35% கடன்-வருமான (Debt-to-Income) வரம்பும் பொதுவாக அதிகபட்ச 25 ஆண்டுகள் (சில புதிய கட்டிடங்களுக்கு 27 ஆண்டுகள் வரை) என்ற கடன் கால வரம்பும் தொடர்கின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்