வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தபோது நோயாளிகளின் அனுமதியின்றி உயிரிழப்பை ஏற்படுத்தும் மருந்துக் கலவையை செலுத்தியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சில சம்பவங்களில் தடயங்களை அழிக்க வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் இறுதிக்கட்டத்தில் மருத்துவர் 12 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டு அவர்களின் வேதனையை முடிவுக்கு கொண்டுவரவே அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.Europe News
இந்நிலையில் இந்த 15 பேரின் மரணம் மட்டுமல்லாமல் மேலும் பல சந்தேகத்துக்கிடமான மரணங்கள் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கூடுதலாக பல டஜன் வழக்குகள் ஆய்வில் உள்ளதாகவும் புதிய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
































