நவம்பர் 28ஆம் திகதி நண்பகல் அளவில் இந்த விபத்து இடம்பெற்றது. ஆர்மர் பார்பர் வீதி சந்திப்பிலிருந்து ஹெட்டியாவத்த சந்திப்பு நோக்கிப் பயணித்த கார், வீதியைக் கடந்து கொண்டிருந்த பெண்ணுடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான காவல்துறை நடவடிக்கை
விபத்தில் காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hettiyawatta pedestrian crossing accident தொடர்பாக காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து கடலோர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

































