இதனைத் தொடர்ந்து ஈரானில் 80-க்கும் மேற்பட்ட முக்கிய கட்டமைப்புகளை அமெரிக்கப் படைகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு பதிலடியாக ஜோர்டானின் அஸ்ராக் (Azraq) இராணுவத் தளத்தை நோக்கி 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும் அவற்றில் எட்டு ஏவுகணைகள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ஜோர்டான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்தால் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய பதற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து உலக நாடுகளின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
































