திரைப்பட வர்த்தக தகவல்களின் படி உலகளவில் ₹75 முதல் ₹80 கோடி எனவும், சென்னை நகரில் முதல் நாள் வசூலில் ஜன நாயகன் புதிய சாதனையை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை இந்தியா முழுவதும் முன்பதிவு மற்றும் முதல் நாள் டிக்கெட் விற்பனையிலும் படம் வலுவான தொடக்கத்தை பதிவு செய்துள்ளது.
இந்த திரைப்படம் விஜயின் அரசியல் பயணத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படமாகவும் நடிகராக அவரது இறுதி திரைப்படமாகவும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் தாக்கமே முதல் நாள் திரையரங்கு வருகையிலும் பிரதிபலித்துள்ளதாக திரைப்பட வர்த்தக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.






























