திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மூவரும் பொதுவெளியில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் இருந்து பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைப் பெற கோரிக்கை
செப்டம்பர் 25-ஆம் தேதி, ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்ததாக முதலமைச்சர் விஜய் குற்றஞ்சாட்டியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நாளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26-ஆம் தேதி, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஜெம் வீரமணியைப் பாதுகாப்பதற்காக திமுக 500 கோடி ரூபாய் பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவையா, அவர்களிடம் முக்கிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணை அதிகாரிகளிடம் ஏன் வழங்கப்படவில்லை, விசாரணை ரகசியத் தகவல்கள் அனுமதியின்றி கிடைத்தனவா என்பதைக் கண்டறிய வேண்டும் என டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
ஆதாரங்கள் அழிக்கப்படுவதையோ மறைக்கப்படுவதையோ தடுக்க அவற்றை உடனடியாகச் சேகரிக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரிய வந்தாலோ அல்லது தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ, போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பொருந்தக்கூடிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. Jem Veeramani POCSO case விசாரணையில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






























