கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த சரவணனின் மகளான, 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த 15ஆம் தேதி மாலை திடீரென மாயமானார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு குளச்சல் ஆவின் பாலகம் அருகே சென்றபோது சிறுமி காணாமல் போனதாக கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் மறுநாள் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை தீவிரம்
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுமியின் தாய்மாமன் இசக்கியப்பன் அவரை பைக்கில் அழைத்துச் சென்றது பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. அவரது செல்போன் இருப்பிடத்தை கண்காணித்த போலீஸார், நான்கு நாட்களுக்குப் பிறகு கோவில்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி இருப்பதை கண்டறிந்து மீட்டனர்.
Kanyakumari girl kidnapping case விசாரணையில், இசக்கியப்பனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்ததாக போலீஸார் கூறினர். சிறுமியை இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாகவும், அதற்கு மறுத்ததால் வீட்டில் அடைத்து வைத்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இசக்கியப்பன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.































