Fox Sports நிர்வாக இயக்குநர் ஸ்டீவ் க்ராலி சனிக்கிழமை (21) இந்த முடிவை உறுதிப்படுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 தொடரின்போது இருவரும் தொலைக்காட்சி வர்ணனையில் இடம்பெறமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது நிரந்தர நீக்கம் அல்ல.
2018 சர்ச்சையை மீண்டும் எழுப்பிய கவாஜாவின் குற்றச்சாட்டு
கவாஜா வெளியிட்ட சுயசரிதையில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து அப்போது தண்டிக்கப்பட்ட மூன்று வீரர்களுக்கு அப்பாலும் சிலருக்கு தெரிந்திருந்ததாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு வார்னர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததுடன், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அசல் விசாரணையையும் கேள்விக்குட்படுத்தினார்.
ஆனால், டெஸ்ட் அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து, அந்தத் திட்டம் குறித்து தமக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது எனக் கூறினார். இதனால் Sandpapergate எனப் பரவலாக அறியப்படும் விவகாரம் மீண்டும் கிரிக்கெட் விவாதத்தின் மையமாகியுள்ளது. Warner Khawaja Fox Cricket விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அசல் விசாரணையை மீண்டும் திறக்காது என தெரிவித்துள்ளது.
அதேவேளை, 2018ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றவர்கள் தங்களது தரப்பை விளக்குவதற்கான கலந்துரையாடல் அரங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. கம்மின்ஸ் டெஸ்ட் அணித் தலைவராக தொடர்வதற்கு ஒருமனதாக ஆதரவு இருப்பதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மீண்டும் உறுதி செய்துள்ளது.































