கடந்த 12-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் காரில் வந்த நபர் ஒருவர் தீ வைத்ததாகவும், அங்கிருந்த ‘பிளாசம் நர்சரி’ பகுதிக்கும் தீ பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ வைத்ததையும், தீ எரிவதையும் அந்த நபர் செல்போனில் பதிவு செய்ததாக போலீஸார் கூறினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் கார் பதிவு எண்ணை ஆய்வு செய்த போலீஸார், எர்ணாகுளம் புத்தன்குரூஸ் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த எபினை சில மணி நேரங்களில் கைது செய்தனர்.
பாகிஸ்தான் தொடர்பு குறித்து விசாரணை
எபினின் மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது வீட்டில் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆய்வில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘பாஸ்’ ஒருவருடன் தொடர்பு இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வழிபாட்டுத் தலத்தைத் தீவைக்க ரூ.10 லட்சம் வழங்குவதாக உறுதியளித்து, முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசம், டெல்லி, மும்பை, அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கிய மையங்களைத் தாக்க திட்டமிடப்பட்டதாகவும் போலீஸார் கூறுகின்றனர். ஆயுதங்கள் தொடர்பான உரையாடல்கள் மற்றும் ஆன்லைன் வாங்கும் இணைப்புகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி நிதிப் பரிமாற்றம், போதைப்பொருள் புழக்கம் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விரைவில் கையிலெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. Kerala synagogue arson investigation தற்போது துணை போலீஸ் கமிஷனர் அருண் கே. பவித்ரன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சிபி டாம் தலைமையிலான தனிப்படையால் தொடரப்படுகிறது.





























