புகாரின் அடிப்படையில் தனிப்படை விசாரணை
20 வயதான பட்டியலின இளம்பெண், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, சாலையோரத்தில் வழிமறித்து போதைப்பொருள் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்ததாக அவர் புகார் அளித்துள்ளார்.
பின்னர் அவரை லாட்ஜிற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பேருந்து மற்றும் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் சித்ரவதையைத் தாங்க முடியாமல் அந்த இளம்பெண் முதலில் கொடுவள்ளி காவல் நிலையத்திலும், பின்னர் காக்கூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். தன்னை வேறு சிலரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
தாமரச்சேரி டி.எஸ்.பி. கே.ஏ.போஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். Kozhikode gang rape case தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் தாமரச்சேரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலரை பிடிக்க போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.






























