நிதி குற்ற அபாயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குவைத் மத்திய வங்கி பரிமாற்ற (எக்சேஞ்ச்) நிறுவனங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச ரொக்கத் தொகையை 3,000 குவைத் டாலரிலிருந்து 1,000 குவைத் டாலராகக் குறைத்துள்ளது.

இந்த புதிய உச்சவரம்பு வெளிநாட்டு பணம் அனுப்புதல் நாணய வாங்கல் மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பண பரிவர்த்தனைகளால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை மேற்பார்வையை வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் மொத்த பரிவர்த்தனை மதிப்புக்கு எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்றும் தினசரி 1,000 குவைத் டாலரை மீறும் தொகைகள் வங்கி கணக்கு மூலம் அல்லது மத்திய வங்கி அங்கீகரித்த பிற ரொக்கமற்ற கட்டண முறைகள் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading