PACI குழுவினரின் மின்னணு சேவைப் பங்களிப்பு
PACI-யின் தலைமை இயக்குநர் Issa Al-Mahmoud, அந்த அமைப்பின் சார்பில் கௌரவப் பலகையைப் பெற்றுக்கொண்டார். நாட்டில் அரசு சார்ந்த டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் மின்னணு சேவைகளை உருவாக்குவதில் PACI முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kuwait Mobile ID electronic signature சேவைகளின் மேம்பாட்டில் பங்களித்த PACI-யின் தேசிய நிபுணர்கள் குழுவுக்கும் தனிப்பட்ட முறையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தக் குழுவில் Systems Development Supervisor Amina Abdulrahim, Quality Control Supervisor Fajr Al-Yaseen, Omar Al-Asfoor மற்றும் Yousef Al-Awadhi ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அரசு சேவைகளை மின்னணு முறையில் ஒருங்கிணைத்து வழங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.































