மிகவும் குறுகிய சேறும் நீரும் நிரம்பிய பாதைகள் குறைந்த பார்வைத்திறன் மற்றும் ஆபத்தான குகை அமைப்பு ஆகியவை மீட்புப் பணியை கடுமையாக சவாலாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாவோஸ், தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் நிபுணர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த மீட்புப் பணியில் சிக்கியவர்களுக்கு நீர்மூழ்கல் உபகரணங்களைப் பயன்படுத்தும் பயிற்சியும் வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தாய்லாந்து குகை மீட்பை நினைவூட்டும் வகையில் இந்த நடவடிக்கை உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
லாவோஸ் வெள்ளக் குகை மீட்பு
லாவோஸின் Xaisomboun மாகாணத்தில் வெள்ளம் நிரம்பிய குகையில் சிக்கியிருந்த நால்வர் சர்வதேச மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மதிப்புள்ள கனிமங்களைத் தேடி சென்ற ஏழு கிராமவாசிகள் திடீர் கனமழை மற்றும் வெள்ளத்தால் குகைக்குள் சிக்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவரை முன்னதாக மீட்ட நிலையில் தற்போது மேலும் நால்வர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக தொடர்கின்றன.

































