கடன் தொல்லையால் கொள்ளை திட்டம்
தீபாவளியையொட்டி நகைக்கடையில் பணிகள் நடைபெற்று வந்ததை அறிந்த நிஷாந்த் உள்ளிட்டோர் அந்தக் கடையை குறிவைத்ததாக மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். நிஷாந்துக்கும் மீனாட்சிக்கும் கடன் தொல்லை இருந்ததால், நகைக்கடையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மீனாட்சி தனது ஸ்கூட்டரை நிஷாந்துக்கு வழங்கி உதவியதாகவும், கடையில் திருடச் செல்லும் திட்டம் முன்கூட்டியே தெரிந்திருந்தும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகள் அடங்கிய பையை நிஷாந்தின் தந்தை சுரேஷ் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நிஷாந்தின் கைகளில் இருந்த டாட்டூக்கள் அவரை அடையாளம் காண உதவியதாக காவல் ஆணையர் கூறினார். இந்த Madurai jewellery shop robbery சம்பவத்தில் வேறு யாரேனும் உதவியுள்ளார்களா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு 15 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும் டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




























