குடும்ப நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘மூன் வாக்’, விடுமுறைக் காலத்தில் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மீண்டும் இணைந்த பிரபுதேவா–ரஹ்மான் கூட்டணி
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளதுடன், அனைத்து பாடல்களையும் பாடியுள்ளார். மேலும், படத்தில் ஒரு காட்சியிலும் நடித்துள்ளார். 1990-களில் வெளியான ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தக் கூட்டணி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இருவரும் கடைசியாக 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து பணியாற்றினர்.
சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். அனுப் வி. ஷைலஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம், முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது Moonwalk movie release date டிசம்பர் 24 என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.






























