குர்தாஸ்பூர் மாவட்டம் கலனூர் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘ஷா’ என்ற நபரின் அறிவுறுத்தலின்படி இருவரும் செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்தச் செயலுக்காக அவர்களுக்கு லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் கூறினர்.
பாகிஸ்தான் கும்பலுடன் தொடர்பு குறித்து விசாரணை
மஹதீப்பின் முன்னாள் கணவர் மற்றும் உறவினர் ஆகியோர் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தொடர்பு மூலமாகவே மஹதீப்பிற்கு ‘ஷா’ அறிமுகமாகியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். முன்னாள் கணவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதுடன், அவரது சகோதரரும் போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rajasthan train track blast case விசாரணையில், இருவரும் மூன்று முறை ராஜஸ்தான் சென்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். முதல் முயற்சியில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடிக்கவில்லை என்றும், பின்னர் இடத்தை ஆய்வு செய்து மீண்டும் வந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இருவருக்கும் இடையிலான உறவு மற்றும் குற்றச் செயல்களில் அவர்களின் பங்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






























