8வது சீசனே கடைசி சீசன் என்று தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தொடரின் முடிவு நெருங்குவதை உணர முடிவதாகவும் ஒலிவியா கூக் கூறியுள்ளார். இந்தத் தொடருடன் பிரிவது தன்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2027ல் 7வது சீசன் வெளியாகும்
‘Slow Horses’ தொடர் 2022ஆம் ஆண்டு Apple TVயில் அறிமுகமானது. ஒவ்வொரு சீசனும் ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. மிக் ஹெர்ரனின் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடரில் கேரி ஓல்ட்மேன், கிறிஸ்டின் ஸ்காட் தாமஸ், ஜாக் லோடன் மற்றும் ஒலிவியா கூக் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொடரின் 7வது சீசன் 2027ஆம் ஆண்டிலும், ‘Slow Horses Season 8’ 2028ஆம் ஆண்டிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8வது அத்தியாயம், மிக் ஹெர்ரனின் ‘Clown Town’ நாவலைத் தழுவி உருவாகிறது.
இந்த சீசனில் ஜாக்சன் லாம்ப் மற்றும் டயானா டேவர்னர் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைகிறது. பிரிட்டன் உளவு அமைப்பை மிரட்டும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உருவாகும் சிக்கல்களை லாம்ப் எதிர்கொள்வார் எனக் கதைச் சுருக்கம் தெரிவிக்கிறது.































