நவம்பர் 17, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தரவரிசை, 107 இடங்களில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை மதிப்பிட்டது. சுற்றுச்சூழல் தாக்கம், சமூக தாக்கம் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
கனேடிய பல்கலைக்கழகங்களின் உலகளாவிய நிலை
டொராண்டோ பல்கலைக்கழகம் கனடாவின் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டாலும், உலகளவில் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு இறங்கியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக கனடாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மெக்கில் பல்கலைக்கழகம் கனடாவில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்தது; உலகளவில் ஒன்பதாவது இடத்திலிருந்து சமநிலை 12ஆவது இடத்துக்கு சென்றது. யுனிவர்சிட்டி லாவல், கனடாவின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்து, தேசிய அளவில் 15ஆவது இடத்திலிருந்து 10ஆவது இடத்துக்கு உயர்ந்தது.
2027 QS sustainability ranking, கல்வி, ஆய்வு, செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் சமூகப் பங்களிப்பு மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பை மதிப்பிடுகிறது. தரவரிசை 52 குறியீடுகளை ஒன்பது மதிப்பீட்டு கோணங்களாகப் பிரித்து கணக்கிடுகிறது.






























