இந்த நாடுகளின் அமைச்சர்கள் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் சந்தித்து திட்டத்தை இறுதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடியாததும், ஐரோப்பாவில் தங்குவதற்கான உரிமை இல்லாததுமான நபர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம் என்று ஆஸ்திரிய அதிபர் கிறிஸ்தியன் ஸ்டோக்கர் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் தொடக்கம்
முதலாவது மையம் 2027ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளிலிருந்து வெளியேற்ற உத்தரவு பெற்றுள்ள சுமார் 100 புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கு தங்கவைக்கப்படுவார்கள். இறுதி நிலையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களையே திட்டம் கவனத்தில் கொள்கிறது.
ருவாண்டா அதிகாரிகள் இதை வரவேற்பு மையம் எனக் குறிப்பிடுகின்றனர். அங்கு தங்குவோருக்கு வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் வாய்ப்புகள் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். ஐரோப்பிய ஆணையம் இந்த நடவடிக்கையை வரவேற்று, திட்டத்தை நெருக்கமாகக் கண்காணிப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும், மனித உரிமை அமைப்புகள் கடும் கவலை வெளியிட்டுள்ளன. காலவரையற்ற தடுப்பு, மனஅழுத்தம் மற்றும் ஆபத்து உள்ள பகுதிகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்புவதைத் தடை செய்யும் non-refoulement கொள்கை மீறப்படலாம் என அவை எச்சரித்துள்ளன. இந்த EU Rwanda return centre திட்டம் தொடர்பாக வியன்னாவில் எதிர்ப்புப் போராட்டமும் நடைபெற்றது.






























