புகைப்படங்களை ஆய்வு செய்ததாக கூறப்படும் தொழில்நுட்பம்
AWS சேவைகளில் உள்ள ‘Rekognition’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முகஅடையாளக் கருவி மூலம் இந்தப் புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வசிக்கும் பாலஸ்தீனர்களைப் பற்றிய விரிவான தகவல்கள், அவர்களின் சம்மதமின்றி ஊடுருவும் முறைகளில் சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
காசா மீதான தாக்குதலின் தொடக்க காலத்தில், ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலில் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை அடையாளம் காணவும் Amazon facial recognition பயன்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. ஹமாஸ் அமைப்பின் போராளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் முகஅடையாளத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
AWS மற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் பதில்கள்
காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள சோதனைச் சாவடிகளில் இஸ்ரேல் இராணுவம் நீண்டகாலமாக முகஅடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ‘நிம்பஸ் திட்டம்’ எனப்படும் ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலில் AWS தரவு மையங்களைத் திறந்தது. வாடிக்கையாளர்களின் கிளவுட் பயன்பாடுகளைப் பற்றிய தகவல் தங்களுக்கு இல்லை என AWS தெரிவித்தது. செயல்பாட்டு தேவைகளுக்கான பணிகள் குறித்து கருத்து தெரிவிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவம் கூறியது.





























