தொலைக்காட்சி விவாதத்தில் டொனால்ட் டிரம்ப்புடன் மோசமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, “எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன்” என்று தனது மனைவி ஜில் பைடனிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர், தனது கட்சியினரின் அழுத்தத்துக்கு மத்தியில் போட்டியிலிருந்து விலகி, துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸுக்கு வழிவிட்டார்.
டிரம்ப் மற்றும் 2024 தேர்தல் குறித்து விமர்சனம்
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவது ஒரு கடமை மற்றும் சிக்கலான முடிவு என பைடன் நூலில் தெரிவித்துள்ளார். வயது அதிகமாக இருந்தாலும், அதிபர் பதவியை வகிக்கத் தகுதியானவராக இருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார். பணவீக்கம் மற்றும் குடியேற்றம் தொடர்பான மக்களின் அதிருப்தி கடினமான பிரச்சினைகள் என்றாலும், அவை தீர்க்க முடியாதவை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை விட தலைவர்களின் தனிப்பட்ட குணநலன்களில் டிரம்ப் கவனம் செலுத்தியதாக பைடன் விமர்சித்துள்ளார். 2021 ஜனவரி 6ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடந்த தாக்குதலுக்காக டிரம்ப் மீதான தனது கண்டனத்தையும் அவர் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகள் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே தளர்த்தப்பட்டதாகவும் பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார். புரோஸ்டேட் புற்றுநோய் காரணமாக நினைவுக் குறிப்புகளுக்கான விளம்பரப் பயணத்தை மட்டுப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார். Joe Biden memoirs நூலின் முடிவில், உயிருடன் இருக்கும் வரை மீண்டும் எழுவேன் என்றும் அமெரிக்காவும் எழும் என்றும் அவர் எழுதியுள்ளார்.






























