வர்த்தமானி அறிவிப்பின்படி மஹமோதர வைத்தியசாலையின் மூடப்பட்டுள்ள ஒரு பகுதி தற்காலிக அடிப்படையில் சிறைச்சாலையாக பயன்படுத்தப்படவுள்ளதுடன் அதன் அதிகாரப் பிரதேசம் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இன்று (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தையடுத்து,அத்தகைய நிலைமைகள் மீண்டும் உருவாகாமல் தடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.



























