11 அரசுப் பல்கலைக்கழகங்களில் 30 சிறப்புப் படிப்புகள்
இந்த இலக்கை அடைய, 11 அரசுப் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட அளவுகளில் 30 சிறப்புப் படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார். செப்டம்பர் 30ஆம் தேதியளவில் பல்வேறு நிலைகளில் உள்ள 455 கல்வித் திட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மலேசிய தகுதிகள் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கல்வித் திட்டத் தரநிலைகள் மூலம், சிறப்புப் படிப்புகளின் மேம்பாடு மற்றும் அங்கீகாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு பீடமும், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மெலாக்காவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்புப் பீடமும், மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் அறிவார்ந்த கணினியியல் பீடமும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பல்கலைக்கழகங்களின் 80 சதவீத இளநிலைப் படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு கூறுகளை இணைக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. திறன் மேம்பாடு, பணியிட அடிப்படையிலான கற்றல் மற்றும் தொகுக்கக்கூடிய படிப்புகள் மூலமும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் உயர்த்தப்படும். Malaysia AI graduates 2030 திட்டத்தில், செயற்கை நுண்ணறிவை மனித சிந்தனையை மாற்றும் கருவியாக அல்லாமல் கற்றலுக்கான உதவியாகப் பயன்படுத்துவதில் சமநிலை அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.




























