கோலாலம்பூரில் நடைபெற்ற Transport Expo Asia 2026 நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். ஆன்லைன் முகவர்கள் டிக்கெட்டுகளை விற்று கமிஷன் பெறுகின்றனர். ஆனால், பேருந்து முனையங்களில் சேவைகள் வழங்குவதிலும், முனைய நிர்வாகத்திலும் அவர்கள் ஈடுபடுவதில்லை என்று அமைச்சர் கூறினார்.
பேருந்து முனையங்கள் மூலம் டிக்கெட் விற்பனை
ரத்து, சேவை தாமதம் அல்லது பணத்தைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால், வெளிநாட்டு முகவர்களை ஒழுங்குபடுத்துவதில் அமைச்சகத்துக்கு குறைந்த அதிகாரமே இருப்பதாக லோக் விளக்கினார். எனவே, டிக்கெட் விற்பனை, முனைய நிர்வாகம் மற்றும் டிக்கெட் செயல்பாடுகளை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
பேருந்து இயக்குநர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாது என்றும், முனையங்கள் தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கக் கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மாறாக, முனையங்கள் கட்டணத்தை குறைத்து பேருந்து நிறுவனங்களுக்கு சிறந்த வருவாய் வழங்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.
இந்த ஏற்பாட்டில் முனையங்களுக்கும் பேருந்து நிறுவனங்களுக்கும் இடையே நேரடி வணிக உறவு, அதாவது B2B முறையில் பரிவர்த்தனைகள் நடைபெறும். நவம்பர் 1 முதல் விரைவுப் பேருந்து டிக்கெட்டுகள் உரிமம் பெற்ற முனையங்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என APAD அறிவித்துள்ளது. எனினும், முனையங்கள் பேருந்து நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக இருந்தால், அவற்றின் இணையதளங்கள் அல்லது ஆன்லைன் முகவர்கள் மூலமும் டிக்கெட் வாங்கலாம்.
Malaysia bus ticket policy குறித்து பேருந்து இயக்குநர்களுக்கு விளக்கக் கூட்டம் நடத்தப்படும் என்றும் லோக் தெரிவித்தார்.





























