2025 மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஸ்வான் ஆற்றில் மெட்ரோநெட் படகு சேவைகளை விரிவுபடுத்தும் திட்டத்தை அரசு அறிவித்தது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும் இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப மதிப்பீடு 107 மில்லியன் ஆஸ்திரேலிய டொலராக இருந்தது.
செலவு அதிகரிப்புக்கு மத்தியில் தொடரும் எதிர்ப்பு
ஆப்பிள்கிராஸ் மற்றும் நெட்லாண்ட்ஸில் உள்ள மட்டில்டா பே ஆகிய இரண்டு இடங்களில் படகுத்துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன. இவை ஐந்து புதிய மின்சாரப் படகுகளால் சேவை செய்யப்பட உள்ளன. திட்டத்தின் மொத்த செலவு தற்போது சுமார் 150 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. மட்டில்டா பே பகுதியின் துறைமுக வடிவமைப்பு மற்றும் நீளம் மாற்றப்பட்டதால் கூடுதல் செலவு ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார்.
கடந்த டிசம்பரில் மேற்கு ஆஸ்திரேலிய திட்டமிடல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தாலும், உள்ளூர் மக்கள், லிபரல் கட்சி மற்றும் கிரீன்ஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 10,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனு, மட்டில்டா பே இடம் குறித்து கூடுதல் ஆய்வு முடியும் வரை கட்டுமான ஒப்பந்தங்களை நிறுத்தக் கோரியுள்ளது.
நெட்லாண்ட்ஸில் ஆய்வு செய்யப்பட்ட ஐந்து இடங்களில் மட்டில்டா பே சிறந்த தேர்வாக இருப்பதாக ரீட்டா சஃபியோட்டி கூறினார். ஜோஜோஸ் மற்றும் பெலிகன் பாயின்ட் உள்ளிட்ட மாற்று இடங்கள் கடற்புல், இடம்பெயரும் பறவைகள் மற்றும் சில காப்புப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். Matilda Bay ferry terminal திட்டப் பணிகள் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கும் என்றும், சேவை 2027ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

































