விஷம் கலந்த பிரியாணி கொடுத்ததாக விசாரணையில் தகவல்
வடாலா கிழக்கில் உள்ள மடோனா காலனியில் ஷெரீப் கான் தனது மகள்கள் ரிஃபாத், 16 வயது நுஜாத் மற்றும் 10 வயது மகன் அகமதுடன் வசித்து வந்தார். அவரது மனைவி கடந்த ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குழந்தைகளை கவனித்துக்கொள்ள இரண்டாவது திருமணம் செய்ய ஷெரீப் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு ரிஃபாத் மற்றும் நுஜாத் எதிர்ப்பு தெரிவித்ததால், தந்தைக்கும் மகள்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த 2ம் தேதி ஷெரீப் வாங்கி வந்த பிரியாணியை ரிஃபாத் மற்றும் நுஜாத் சாப்பிட்டனர். பின்னர் நுஜாத் தனது அத்தை கௌசியாவின் வீட்டுக்குச் சென்றார்.
மறுநாள் அதிகாலை ரிஃபாத் அசைவின்றி இருப்பதாக ஷெரீப் உறவினர்களிடம் தெரிவித்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். உடற்கூறாய்வில் கழுத்து இறுக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தெரியவந்தன.
விசாரணையில், பிரியாணியில் விஷம் கலந்து ரிஃபாத் மயங்கிய பின்னர் அவரது கழுத்தை நெரித்ததாக ஷெரீப் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இளைய மகளையும் கொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் நுஜாத் அத்தை வீட்டுக்குச் சென்றதால் தப்பியதாகவும் கூறப்படுகிறது. Mumbai father daughter murder case-இல் கைது செய்யப்பட்ட ஷெரீப்பிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
































