நினைவுச் சின்னத்தில் புதிதாக நான்கு பெயர்கள்
நிகழ்வுக்கு முன்பாக Canberra தேசிய காவல் நினைவுச் சின்னத்தில் நான்கு அதிகாரிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட புதிய நினைவுக் கற்கள் அமைக்கப்பட்டன. Victoria காவல்துறை அதிகாரிகளான Detective Leading Senior Constable Neal Thompson மற்றும் Senior Constable Vadim de Waart-Hottart ஆகியோர் 2025 ஆகஸ்டில் Porepunkah பகுதியில் Dezi Freeman நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Detective Senior Constable Maxine Bembridge, பணிக்கு செல்லும் வழியில் மே மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். சேவையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட புற்றுநோயால் ஓய்வுபெற்ற New South Wales Sergeant Mark Bransgrove உயிரிழந்ததும் நினைவுகூரப்பட்டது.
Australian Federal Police தலைமையகத்திலிருந்து நினைவுச் சின்னம் வரை சுமார் 300 காவலர்கள் நடைபயணம், குதிரைப் பயணம் மற்றும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பாகச் சென்றனர். குடும்பத்தினர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்தனர். ஆளுநர் ஜெனரல் Sam Mostyn, அதிகாரிகள் கடமையாற்றியபோது “கொடூரமான சூழ்நிலைகளில்” கொல்லப்பட்டதாகக் கூறினார்.
கடந்த வாரம் காவல் வாகன விபத்தில் உயிரிழந்த New South Wales Constable Mia Lay-க்கும் நிகழ்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருக்கு 20 வயது; காவல்துறையில் 16 மாதங்கள் மட்டுமே பணியாற்றியிருந்தார். அவரது பெயர் அடுத்த ஆண்டு நினைவுச் சின்னத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
National Police Remembrance Day நினைவு நிகழ்வு நடைபெறும் தேசிய காவல் நினைவுச் சின்னம் 20 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதன் பின்னர் பொறிக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 719-லிருந்து 836 ஆக உயர்ந்துள்ளது.






























